Posts

ஈழத்தமிழிசை அரங்கேறறம்

அனைத்துத் தமிழரையும் அணைத்துக்   கொண்டோடும் அழகிய பிரவாகம்   ஈழத்தின்   தமிழிசை -------------------------------------------------------------------------------------------------------------------------------    சி.மௌனகுரு ஈழத்தின் தமிழிசை (ஆற்றுகை நிகழ்வு)இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி  மண்டபத்தில் 21.04.2019   அன்று இடம் பெறுகிறது ஈழத்துக் கவிஞர்களாலும் இசைப்   பாடகர்களாலும்   இயற்றப்பட்ட பாடல்கள் தெரிவு  செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் விசேட பயிற்சியளிக்கப்பட்டு, தவமைந்தன்   றொபேர்ட்டினலும்   அவரது   ஒன்பது மாணவர்களளாலும் 100 பாடல்களை  அன்றையதினம் இசைக்க இருப்பதாக அறிந்து பெருமகிழ்வடைகிறேன். 25 இற்கும் மேற்பட்ட ஈழத்துக் கவிஞர்களின் பாடல்கள் இந்நிகழ்விற்காகத்  தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் . தானவர்ணம், பதவர்ணம், கீர்த்தனை, சௌக்க காலக் கிருதி, பதம், துதிப்பாடல்கள்,  தில்லானா, காவடிச்சிந்து, திருப்புகழ் போன்ற இசைப்பாடல் வகைகள் இந்நிகழ்வில்  இடம்பெற உள்ளதாகவும் அறிகிறேன். இவற...

படைப்பது மாத்திரமே எமது செயல்.படைப்பு சுவைஞரிடம் சென்றதும் அது அவர்களுடயதாகி விடுகிறது.

Image
படைப்பது மாத்திரமே எமது செயல்.படைப்பு சுவைஞரிடம் சென்றதும் அது அவர்களுடயதாகி விடுகிறது.   காண்டவ தகனம் (கூத்து பரதம் தழுவிய நிருத்திய நாடகம் பற்றி எனது குறிப்பும் சுவைஞர்கள் குறிப்பும்) _______________________________________________________ சி.மௌனகுரு அரங்க ஆய்வு கூடம் தயாரித்த காண்டவ தகனம் இது வரை ஆறு மேடைகள் கண்டுவிட்டது.ஒவ்வொரு மேடையேற்றமும் எமக்கு ஒவ்வொரு அனுபவங்களே. இது நாடகம் என நாம் சொன்னாலும் சுவைஞர்கள் கூத்து என்றே அழைக்கிறார்கள். கூத்தின் அம்சங்கள் இதில் தூக்கலாக இருப்பதனால் அவ்வாறு அழைக்கிறார்களோ தெரியவில்லை. படைப்பது மாத்திரமே எமது செயல். படைப்பு சுவைஞரிடம் சென்றதும் அது அவர்களுடயதாகி விடுகிறது. அவர்கள் பெயர் வைப்பார்கள், விமர்சனம் செய்வார்கள் .குறை நிறை கூறுவார்கள் அது சுவைஞர் செயல். இங்கு காண்டவ தகனம் பற்றிய எனது குறிப்பும் சுவஞைர் சிலரின் குறிப்புகளும் தரப் படுகின்றன ____________________________________________ காண்டவ தகனம் " -------------------------------------- சி.மௌனகுரு கூத்தில் நான் அண்மையில் மேற் கொண்ட புதிய முயற்சியே "காண்டவ தகனம்...

தமிழ்முரசு Tamil Murasu: ஒரே நாளில் 120 மாணவர்கள் மேடையேறினர், நாடகம் செய்தனர், தம் திறன் காட்டினர்

தமிழ்முரசு Tamil Murasu: ஒரே நாளில் 120 மாணவர்கள் மேடையேறினர், நாடகம் செய்தனர், தம் திறன் காட்டினர்

தமிழ்முரசு Tamil Murasu: கன்பராவில் பேராசிரியர் மௌனகுருவின் இராவணேசன் கூத்து

தமிழ்முரசு Tamil Murasu: கன்பராவில் பேராசிரியர் மௌனகுருவின் இராவணேசன் கூத்து

அரங்கியல் பேராசிரியர்கள் இருவர்.

Image
அ .ராமசாமி Prof. A.RAMASAMY, Head of the department, Department of Tamil Studies , Manonmaniam Sundaranar university, Tirunelveli -627012 பேராசிரியர்.அ.ராமசாமி எழுத்துகள் இராமானுஜமும் மௌனகுருவும் நாடகக் கல்வி: கிழக்கும் மேற்கும் இன்று, நாடகக் கலை ஒரு கல்வித்துறைசார் படிப்பு. நாடகக்கலை மட்டுமல்ல; நடனம்,இசை, ஓவியம்,சிற்பம்,திரைப்படம் எனக் கண்ணுக்கும் காதுக்கும் விருந்தளிக்கும் நிகழ்த்துக்கலைகளும், நுண்கலை களும், நிலைக் கலைகளும் கூடக் கல்வித்துறைசார் படிப்புகளாகி இருக்கின்றன. பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் பட்டப்படிப்பாகவும் பட்டமேற்படிப்புகளாகவும் இவை யெல்லாம் கற்றுத் தரப்பட்டு பட்டங்கள் தரப்படுகின்றன. இப்படிச் சொல்லுவதால் இவையெல்லாம் இப்பொழுதுதான் கற்றுத் தரப்படுகின்றன என்றோ, அதற்கு முன்பு அத்தகைய கல்வி இல்லை என்றோ அர்த்தமில்லை. சுதந்திரத்திற்கு முன்னும்கூட இக்கலைகளைக் கற்றுத்தருபவர்களும் கற்றுக் கொள்பவர்களும் இருந்தார்கள். கல்வி நிறுவனங்களும் இருந்தன ; ஆனால் வேறுவிதமாக இருந்தன. குரு-சிஷ்யப்பாரம்பரியத்தில் ஒருசில குழுக்களுக் குள்ளேயே / சாதிகளுக்குள்ளேயே கற்றுக் கொள்ளப்பட்...

பேராசிரியர் மௌனகுரு

Image
February 26, 2008 – 11:05 am ஜெயமோஹன் ஈழ நாடகப்பேராசிரியர் மௌனகுரு மட்டக்களப்பிலிருந்து சென்னைக்கு வந்து கேரளம் சென்று திருவனந்தபுரம் வழியாக என் வீட்டுக்கு வந்திருந்தார். இரண்டுநாள் என்னுடன் தங்கினார். குழந்தைகளுடன் சட்டென்று இணைந்துவிடும் பழக்கம் கொண்ட உற்சாகமான மனிதர் சில கணங்களிலேயே என் பிள்ளைகளுக்குப் பிடித்தமானவராக ஆனார். ”இவரா? நீ பேரைச்சொன்னப்போ யாரோ சாமியார் வருவார்னுல்ல நினைச்சேன்?”என்றான் அஜிதன். பேராசிரியர் சிறுவயதில் நடனமாடுவார் என்ற தகவலின் வியப்பிலிருந்து சைதன்யாவால் எளிதில் வெளிவர முடியவில்லை. மாலை பேராசியரை அழைத்துக் கொண்டு நாஞ்சில்நாடனைப் பார்க்கச் சென்றேன். வடிவீஸ்வரத்தில் தம்பிவீட்டில் தங்கியிருந்தார். குடும்பத்தின் நட்சத்திரமாக இருந்த ஒரு தம்பியை சமீபத்தில் இழந்த துயரம். அவரிடம் பேசிவிட்டு வடிவீஸ்வரம் வடிவுடையம்மன் கோயிலுக்குச் சென்றோம். திரும்பிவந்து இரவு பன்னிரண்டு மணிவரை மட்டக்களப்பு கூத்து மற்றும் நாடகம் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். ஈழத்தமிழ் கேட்க அருண்மொழிக்கு மிகவும் பிடிக்கும். பேராசிரியர் பல ஊர் பழகி அதை பெரிதும் இழந்த...

பேராசிரியர் மெளன குருவின் பாரதிதாசன் ஆய்வு

Friday, January 26, 2 அ.மார்க்ஸ் தமிழகம் நன்கறிந்த ஈழப் பேராசிரியர்களில் ஒருவர் சின்னையா மௌனகுரு அவர்கள். அவரது நூலொன்று தமிழகத்தில் வெளிவருவது இதுவே முதல் முறை எனக் கருதுகிறேன். மௌனகுரு பல பரிமாணங்கள் உடையவர். முதன்மையாக அவர் ஒரு கலைஞர். ஈழத்து அரங்கத்துறையில் முக்கியப் பங்களிப்பு செய்த நான்கைந்து பேர்களில் மௌனகுரு குறிப்பிடத்தக்கவர். அரங்க நடவடிக்கைகளிலும் அவர் பல துறைகளில் தடம் பதித்தவர். அரங்க ஆய்வாளர், பயிற்சியாளர், இயக்குநர், பிரதி உருவாக்குபவர் என்பதோடு மிகச் சிறந்த நடிகராகவும் கூத்துக் கலைஞராகவும் பெயர் பெற்றவர். புகழ் பெற்ற ‘இராவணேசன்’, ‘சங்காரம்’ முதலிய நாடகங்களில் அவரது கூத்துச் சிறப்பை மற்றவர் கூற வாசிக்கையில் நாம் பார்க்க இயலாது போன வருத்தம் ஏற்படுவது இயல்பு. இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் ஊறிப்போன சாதியத்தை எதிர்த்து அரங்கேறிய இரு முக்கிய நாடக நிகழ்வுகளென “கந்தன் கருணை”யும் “சங்காரத்தை”யும் டானியல் அவர்கள் குறிப்பிடுவார்கள். இவ்விரு நாடகங்களிலும் மௌனகுரு அவர்களின் பங்கு முக்கியமானது. மௌனகுரு நாடக ஆசிரியர், அரங்கத் துறை அறிஞர் மட்டுமன்று அவர் ஒரு கவிஞர், சி...