தமிழ் 'இன்னிய' அணி
பேண்ட்' குழுவுக்கு மாற்றீடாக தமிழ் 'இன்னிய' அணி ( வீரகேசரி 05-06-2005, 12-06-2005 வார இதழ்களில் இருந்து நன்றியுடன் மீள்பிரசுரமாகின்றது) நேர்கண்டவர்: செ.ஸ்ரீகோவிந்தசாமி கி ழக்கில் அருகிவரும் தமிழ் பாரம்பரிய கலை வடிவங்களுக்கு புத்துயிர் அளித்து வருபவர்களில் பேராசிரியர் சி. மௌனகுரு ஒரு முன்னோடியாக விளங்கி வருகின்றார் என்றால் மிகையாகாது. அந்த அடிப்படையில் வரவேற்பு வைபவங்களில் இங்கு வழக்கமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பாடசாலை மாணவர்களின் 'பேண்ட்' வாத்தியக் குழுவுக்கு மாற்றீடாக தமிழ் கலாசார பாரம்பரிய ரீதியில் வாத்தியக் குழுவொன்றை பேராசிரியர் சி.மௌனகுரு அமைத்துள்ளார். தமிழ் 'இன்னிய அணி ' என இது அழைக்கப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் போது இடம்பெற்ற இந்த வாத்தியக் குழுவின் இன்னிøயும், ஆட்டமும் பார்வையாளர்கள் பலரையும் கவர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தத் தமிழ் பாரம்பரிய இன்னிய அணிக்குழு (Group of Tamil Band) உருவானது பற்றி பேராசிரியரிடம் 'கேசரி' சார்பாகக் கேட்டபோது அவர் அளித்த பதில்கள் வருமாறு:...
Comments
Post a Comment