ஈழத்தமிழிசை அரங்கேறறம்


அனைத்துத் தமிழரையும் அணைத்துக்  கொண்டோடும்
அழகிய பிரவாகம்  ஈழத்தின்  தமிழிசை
-------------------------------------------------------------------------------------------------------------------------------
  சி.மௌனகுரு
ஈழத்தின் தமிழிசை (ஆற்றுகை நிகழ்வு)இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி
 மண்டபத்தில் 21.04.2019  அன்று இடம் பெறுகிறது
ஈழத்துக் கவிஞர்களாலும் இசைப்  பாடகர்களாலும்  இயற்றப்பட்ட பாடல்கள் தெரிவு
 செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் விசேட பயிற்சியளிக்கப்பட்டு, தவமைந்தன்
  றொபேர்ட்டினலும்  அவரது  ஒன்பது மாணவர்களளாலும் 100 பாடல்களை 
அன்றையதினம் இசைக்க இருப்பதாக அறிந்து பெருமகிழ்வடைகிறேன்.


25 இற்கும் மேற்பட்ட ஈழத்துக் கவிஞர்களின் பாடல்கள் இந்நிகழ்விற்காகத்
 தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் .
தானவர்ணம், பதவர்ணம், கீர்த்தனை, சௌக்க காலக் கிருதி, பதம், துதிப்பாடல்கள், 
தில்லானா, காவடிச்சிந்து, திருப்புகழ் போன்ற இசைப்பாடல் வகைகள் இந்நிகழ்வில்
 இடம்பெற உள்ளதாகவும் அறிகிறேன்.
இவற்றுள் தொண்ணூறுக்கும் அதிகமான பாடல்கள் புதிதாக தவமைந்தன்
 றொபேட்டினால் இசை வடிவம் கொடுக்கப்பட்டுப் பயிற்சியளிக்கப்பட்டுள்ளன
இது ஓர் பெரு முயற்சி.சாதனை எனினும் பொருந்தும்
இவ்வாண்டில் இது ஓர் முக்கிய நிகழ்ழ்சியாக எனக்குத் தெரிகிறது
ஈழத்தமிழருக்கான   ஒரு தனி மரபு இலக்கியம் நாடகம் இசை ஓவியம் .கூத்து.
 நடனம் வாழ்க்கை முறை என அனைத்திலும் உண்டு

இப் பண்பாட்டுத் தனித்துவத்தை ஆறுமுலநாவலர்,தொடக்கம்
 சுவாமி விபுலானந்தர் ஊடாக 
 பேராசிரியர்களான கணபதிப்பிள்ளை கைலாசபதி  வித்தியானந்தன் சிவத்தம்பி
 மற்றும் தளையசிங்கம்  ஏ,ஜே  கனகரத்தினா  ஊடாக  இன்று  இசை வாணர்
  தவமைந்தன் ரொபேர்ட் வரை  அனைத்து  அறிஞர்களும்  கலைஞர்களும் 
அழுத்திக் கூறி  வந்துள்ளனர்

தமிழகப் பண்பாட்டின்  தொப்புழ்க்கொடியுடன் பிணைக்கப்பட்டிருக்கும் நாம்
  அப்பெருமரபின்  வாரிசு எனக் கர்வம் கொள்ளும் அதே வேளை தொப்புழ்க்
 கொடியிலிருந்து  பிரிந்தமையினால்  நாமும் நமக்கோர் நலியாக கலையுடையோம்
 என்ற சுய  கௌரவமும் செருக்கும்  கொண்டுள்ளோம்.
இவ்வகையில் நாமும் நமக்கோர் இசைப் பாரம்பரியம்  கொண்டுள்ளோம்

.இதற்காக தம் வாழ்வை அர்ப்பணித்த  இசை வாணர்களைக் கொண்டது
  எமது தேசம்
 ஈழத்தில்  கர்னாடக கீர்த்தனைகள்  பதங்கள்  இசைப்பாடல்கள் படியோர்  அதிகம்
எமது செந்நெறீ  இசை  மரபில்  2000க்கும் அதிகமான கீர்த்தனைகள்  உள்ளன 
என அறீகிறோம்
ஈழத்து  மெல்லிசை என ஒன்று  உருவாகி  இன்று அது  பல பரிமாணங்களையும்
  பெற்றுள்ளது பந்நூற்றூக் கணக்கான  மெல்லிசைப், பாடல்கள் எம்மிடமுள
பல்லாயிரக் கணக்கான மக்கள்  இசைப்பாடல்கள்  ஈங்குண்டு

இறைவன் ,இயற்கை  காதல், சமுகம், விலையாட்டு  வேடிக்கை
 தொழில்  சடங்கு கோபம் தாபம்   என அதன் உட்பொருள் விரியும்.
அப்பாடல்கள் பல சொற்சுவையும்  பொருட்சுவையும் மிக்கவை
அப்பாடல்களில்  சிலவற்றைத்  தெரிந்தெடுத்து  இசையமைத்து 
நமது செந்நெறி இசை மரபை  ஈழத்தின் தமிழிசை  என அரங்கேற்றுகின்றார்
  தவமைந்தன்.
இதற்கு  இசையில் ஆழமான புலமை மாத்திரமன்றி  அசாத்திய  துணிவும் 
தேவை.இவை இரண்டும் ஒருங்கே  அமைந்தவர் றொபேர்ட்
. மிகுந்த கற்பனை  வளமுள்ள  கலைஞன் அவர்
வாய்ப்பாட்டிலும் வாத்தியம் இசைப்பதிலும் வல்லவர்
 ஈழத்துச் செந்நெறித் தமிழிசையின் அரங்கேற்றம் நிகழ்த்தும் 
தவமைந்தனையும் அவரது  அணிசேர் இசைகலைஞர்களையும்
 வாழ்த்தும் அதே வேளை. ஈழத்தின் செந்நெறிசாராத செழுமையான மக்களிசை 
மரபொன்றும் உண்டு என்பதை இங்கு கூற விரும்புகின்றோம்

.இசை வல்லுனரான தவமைந்தனுக்கு  இது தெரியாததொன்றல்ல

முதல் பாகமாக இதனைச் செய்யும் இவர் அடுத்த பாகமாக அதனையும் செய்து  
அதன் பின் இரண்டையும் இணைத்து  மூன்றாம் பாகமாக ஓரு முழு ஈழத் தமிழிசை
 ஒன்றை   எமக்கு அளிப்பார் என எதிர்பர்ப்போம்.
அவரால் அது முடியும்

த்மிழிசை என்பது ஒரு பெரும் பேராறு
அது காலத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப தன்னைத் தகவமைத்துப்
 பிரவகித்தபடி ஓடிக்கொண்டிருக்கிறது
தமிழிசை என்பது அனைத்தையும் இணைத்த அனைத்துத் தமிழர்களையும்
  பிணைத்துக் கொண்டோடும் அழகிய பிரவாகம்
அந்தப் பிரவாகம் கரை புரண்டோடி  அனைவரையும்  நனைக்கட்டும்
இசையால் இணைவோம் இசையால் இணைவோமே
இசையால் இணைவோமே-தமிழ்
இசையால் இணைவோம் இசையால் இணைவோம்
இசையால் இணைவோமே




Comments

Popular posts from this blog

தமிழ் 'இன்னிய' அணி

தமிழகப் பல்கலைக்கழகங்களில் இன்னிய அணி உருவாகட்டும்..

கூத்தரங்கம்