படைப்பது மாத்திரமே எமது செயல்.படைப்பு சுவைஞரிடம் சென்றதும் அது அவர்களுடயதாகி விடுகிறது.
படைப்பது மாத்திரமே எமது செயல்.படைப்பு சுவைஞரிடம் சென்றதும் அது அவர்களுடயதாகி விடுகிறது. காண்டவ தகனம் (கூத்து பரதம் தழுவிய நிருத்திய நாடகம் பற்றி எனது குறிப்பும் சுவைஞர்கள் குறிப்பும்) _______________________________________________________ சி.மௌனகுரு அரங்க ஆய்வு கூடம் தயாரித்த காண்டவ தகனம் இது வரை ஆறு மேடைகள் கண்டுவிட்டது.ஒவ்வொரு மேடையேற்றமும் எமக்கு ஒவ்வொரு அனுபவங்களே. இது நாடகம் என நாம் சொன்னாலும் சுவைஞர்கள் கூத்து என்றே அழைக்கிறார்கள். கூத்தின் அம்சங்கள் இதில் தூக்கலாக இருப்பதனால் அவ்வாறு அழைக்கிறார்களோ தெரியவில்லை. படைப்பது மாத்திரமே எமது செயல். படைப்பு சுவைஞரிடம் சென்றதும் அது அவர்களுடயதாகி விடுகிறது. அவர்கள் பெயர் வைப்பார்கள், விமர்சனம் செய்வார்கள் .குறை நிறை கூறுவார்கள் அது சுவைஞர் செயல். இங்கு காண்டவ தகனம் பற்றிய எனது குறிப்பும் சுவஞைர் சிலரின் குறிப்புகளும் தரப் படுகின்றன ____________________________________________ காண்டவ தகனம் " -------------------------------------- சி.மௌனகுரு கூத்தில் நான் அண்மையில் மேற் கொண்ட புதிய முயற்சியே "காண்டவ தகனம்...