Posts

Showing posts from 2009

அரங்கியல் பேராசிரியர்கள் இருவர்.

Image
அ .ராமசாமி Prof. A.RAMASAMY, Head of the department, Department of Tamil Studies , Manonmaniam Sundaranar university, Tirunelveli -627012 பேராசிரியர்.அ.ராமசாமி எழுத்துகள் இராமானுஜமும் மௌனகுருவும் நாடகக் கல்வி: கிழக்கும் மேற்கும் இன்று, நாடகக் கலை ஒரு கல்வித்துறைசார் படிப்பு. நாடகக்கலை மட்டுமல்ல; நடனம்,இசை, ஓவியம்,சிற்பம்,திரைப்படம் எனக் கண்ணுக்கும் காதுக்கும் விருந்தளிக்கும் நிகழ்த்துக்கலைகளும், நுண்கலை களும், நிலைக் கலைகளும் கூடக் கல்வித்துறைசார் படிப்புகளாகி இருக்கின்றன. பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் பட்டப்படிப்பாகவும் பட்டமேற்படிப்புகளாகவும் இவை யெல்லாம் கற்றுத் தரப்பட்டு பட்டங்கள் தரப்படுகின்றன. இப்படிச் சொல்லுவதால் இவையெல்லாம் இப்பொழுதுதான் கற்றுத் தரப்படுகின்றன என்றோ, அதற்கு முன்பு அத்தகைய கல்வி இல்லை என்றோ அர்த்தமில்லை. சுதந்திரத்திற்கு முன்னும்கூட இக்கலைகளைக் கற்றுத்தருபவர்களும் கற்றுக் கொள்பவர்களும் இருந்தார்கள். கல்வி நிறுவனங்களும் இருந்தன ; ஆனால் வேறுவிதமாக இருந்தன. குரு-சிஷ்யப்பாரம்பரியத்தில் ஒருசில குழுக்களுக் குள்ளேயே / சாதிகளுக்குள்ளேயே கற்றுக் கொள்ளப்பட்...

பேராசிரியர் மௌனகுரு

Image
February 26, 2008 – 11:05 am ஜெயமோஹன் ஈழ நாடகப்பேராசிரியர் மௌனகுரு மட்டக்களப்பிலிருந்து சென்னைக்கு வந்து கேரளம் சென்று திருவனந்தபுரம் வழியாக என் வீட்டுக்கு வந்திருந்தார். இரண்டுநாள் என்னுடன் தங்கினார். குழந்தைகளுடன் சட்டென்று இணைந்துவிடும் பழக்கம் கொண்ட உற்சாகமான மனிதர் சில கணங்களிலேயே என் பிள்ளைகளுக்குப் பிடித்தமானவராக ஆனார். ”இவரா? நீ பேரைச்சொன்னப்போ யாரோ சாமியார் வருவார்னுல்ல நினைச்சேன்?”என்றான் அஜிதன். பேராசிரியர் சிறுவயதில் நடனமாடுவார் என்ற தகவலின் வியப்பிலிருந்து சைதன்யாவால் எளிதில் வெளிவர முடியவில்லை. மாலை பேராசியரை அழைத்துக் கொண்டு நாஞ்சில்நாடனைப் பார்க்கச் சென்றேன். வடிவீஸ்வரத்தில் தம்பிவீட்டில் தங்கியிருந்தார். குடும்பத்தின் நட்சத்திரமாக இருந்த ஒரு தம்பியை சமீபத்தில் இழந்த துயரம். அவரிடம் பேசிவிட்டு வடிவீஸ்வரம் வடிவுடையம்மன் கோயிலுக்குச் சென்றோம். திரும்பிவந்து இரவு பன்னிரண்டு மணிவரை மட்டக்களப்பு கூத்து மற்றும் நாடகம் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். ஈழத்தமிழ் கேட்க அருண்மொழிக்கு மிகவும் பிடிக்கும். பேராசிரியர் பல ஊர் பழகி அதை பெரிதும் இழந்த...

பேராசிரியர் மெளன குருவின் பாரதிதாசன் ஆய்வு

Friday, January 26, 2 அ.மார்க்ஸ் தமிழகம் நன்கறிந்த ஈழப் பேராசிரியர்களில் ஒருவர் சின்னையா மௌனகுரு அவர்கள். அவரது நூலொன்று தமிழகத்தில் வெளிவருவது இதுவே முதல் முறை எனக் கருதுகிறேன். மௌனகுரு பல பரிமாணங்கள் உடையவர். முதன்மையாக அவர் ஒரு கலைஞர். ஈழத்து அரங்கத்துறையில் முக்கியப் பங்களிப்பு செய்த நான்கைந்து பேர்களில் மௌனகுரு குறிப்பிடத்தக்கவர். அரங்க நடவடிக்கைகளிலும் அவர் பல துறைகளில் தடம் பதித்தவர். அரங்க ஆய்வாளர், பயிற்சியாளர், இயக்குநர், பிரதி உருவாக்குபவர் என்பதோடு மிகச் சிறந்த நடிகராகவும் கூத்துக் கலைஞராகவும் பெயர் பெற்றவர். புகழ் பெற்ற ‘இராவணேசன்’, ‘சங்காரம்’ முதலிய நாடகங்களில் அவரது கூத்துச் சிறப்பை மற்றவர் கூற வாசிக்கையில் நாம் பார்க்க இயலாது போன வருத்தம் ஏற்படுவது இயல்பு. இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் ஊறிப்போன சாதியத்தை எதிர்த்து அரங்கேறிய இரு முக்கிய நாடக நிகழ்வுகளென “கந்தன் கருணை”யும் “சங்காரத்தை”யும் டானியல் அவர்கள் குறிப்பிடுவார்கள். இவ்விரு நாடகங்களிலும் மௌனகுரு அவர்களின் பங்கு முக்கியமானது. மௌனகுரு நாடக ஆசிரியர், அரங்கத் துறை அறிஞர் மட்டுமன்று அவர் ஒரு கவிஞர், சி...

கூத்தரங்கம்

Image
வளப்பற்றாக்குறையும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமின்மையும் எனக்கான சவால்கள் In செவ்வி on அக்டோபர்17, 2007 at 5:38 பிற்பகல் கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவர் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள் கூத்தரங்கிற்காக வழங்கிய விசேட செவ்வி இங்கு தரப்படுகிறது. நேர்கண்டவர் தே.தேவானந்த் கே: கூத்தரங்கம் சார்பாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களே, நீங்கள் ஈழத்தமிழ் நாடக உலகில் நன்கு அறியப்பட்ட ஒருவர். கூத்தரங்கில் அறிமுகமாகி பல்வேறு வகையான நாடக வடிவங்களின் பரிச்சயங்களைப் பெற்று ஒரு மூத்த நாடகவியலாளனாக இருக்கிறீர்கள். உங்களை நாடகத் துறையில் ஈடுபட வைத்தது எது? ப: சாதாரணமாக நாடகம் நடிப்பதன் மூலம் பிறர் பாராட்டுக்களையும் புகழையும் பெற விரும்பும் நிலைதான் என்னை நாடகத் துறையில் ஈடுபட வைத்தது. 1948ம் ஆண்டு எனது கிராமப் பாடசாலை நாடகம் ஒன்றில் நான் நடித்தபோது எனக்கு மாணவர்கள் ஆசிரியர்களிடமிருந்து கிடைத்த அங்கீகாரம், மதிப்பு, அன்பு, புகழ் என்பனவே ஆரம்ப காலத்தில் என்னை ஈடுபட வைத்திருக்க வேண்டும் என்று இப்போது நினைக்கிறேன். கே: உங்கள் ந...

பேராசிரியர் சிவத்தம்பி நாடகத்துக்கூடாக மக்களை அறிய முயன்றார், தமிழர்களை அறிய முயன்றார், பண்பாட்டை அறிய முயன்றார்.

Image
கி ழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண் கலைத்துறை தலைவர் பேராசிரியர் சி.மௌனகுருவின் பகிர்வு பேராசிரியர் சிவத்தம்பிக்கு 75 வயது ஆகிவிட்டது. இன்று ஓய்வு பெற்ற நிலையிலே இன்று அவர் ஓய்வு பெறாதவராக இயங்கிக் கொண்டிருக்கிறார். ஆய்வாளராக, விமர்சகராக, கவிஞராக, சிந்தனையாளராக அவர் மதிக்கப்படுகிறார். இவற்றிற்கும் அப்பால் இவர் மிகச்சிறந்த நாடக எழுத்தாளராகவும் நாடக நடிகராகவும், நாடக நெறியாளராகவும் இருப்பதும் ஈழத்து நாடக வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவராக திகழ்வதும் சிலர் அறியாத விடயமாகும். நான் இங்கு பேராசிரியரின் நாடக விடயங்களையும் அவருடன் எனக்கிருந்த உறவுகளையும் அழுத்திக் கூற விரும்புகிறேன். எனக்கும் பேராசிரியர் சிவத்தம்பிக்குமான உறவு ஏறத்தாழ 45 வருடகால உறவாகும். இதை அரை நூற்றாண்டு உறவு எனலாம். ஈழத்தின் வடபால் பிறந்த ஒருவர் பேராசிரியர் சிவத்தம்பி. ஈழத்தின் கிழக்கிலே பிறந்தவன் நான் . இந்த இரண்டையும் இணைத்து வைத்த பெருமை நாடக கலைக்கு இருப்£தை நான் இப்போது சிந்தித்துப் பார்க்கின்றேன். 1959ஆம் ஆண்டு பேராசிரியர் சிவத்தம்பியை சந்தித்தேன். அப்போது நான் 16-17 வயது மாணவனாக வந்தாறுமூலை மத்திய கல்லூரிய...

THE STORY OF TRANSFORMATION OF OTHERS TO THE GODDESS OF TAMILS-GODESS KALI WORSHIP AMONG TAMILS

1 Fourth Annual Tamil Studies Conference – Organized by the Centre for South Asian Studies, University of Toronto and the University of Windsor (May 21- May 23. 2009. Prof. S.Maunaguru The story transformation of the Goddess of others, Kali to the Goddess of the Tamils is interwoven with the socio cultural history of Tamils. It is observed in history that many attempts have been made to bring down the goddess Kali , considered as another form of Sakthi, under the male god Shiva but on the other hand the physical appearance of Kali portrayed by the artists ( painters, sculptors and poets) has shown the refusal of the female to submission. Through the ages the beauty and the aesthetic aspects of the Hindu female god is constructed by the Hindu tradition in a manner portraying the goddess as soft, dedicate modest and beautiful with fair complexion. But the constructions of the physical appearance of the goddess Kali by the artists is entirely different. The figure portrayed with da...