Posts

Showing posts from 2019

ஈழத்தமிழிசை அரங்கேறறம்

அனைத்துத் தமிழரையும் அணைத்துக்   கொண்டோடும் அழகிய பிரவாகம்   ஈழத்தின்   தமிழிசை -------------------------------------------------------------------------------------------------------------------------------    சி.மௌனகுரு ஈழத்தின் தமிழிசை (ஆற்றுகை நிகழ்வு)இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி  மண்டபத்தில் 21.04.2019   அன்று இடம் பெறுகிறது ஈழத்துக் கவிஞர்களாலும் இசைப்   பாடகர்களாலும்   இயற்றப்பட்ட பாடல்கள் தெரிவு  செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் விசேட பயிற்சியளிக்கப்பட்டு, தவமைந்தன்   றொபேர்ட்டினலும்   அவரது   ஒன்பது மாணவர்களளாலும் 100 பாடல்களை  அன்றையதினம் இசைக்க இருப்பதாக அறிந்து பெருமகிழ்வடைகிறேன். 25 இற்கும் மேற்பட்ட ஈழத்துக் கவிஞர்களின் பாடல்கள் இந்நிகழ்விற்காகத்  தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் . தானவர்ணம், பதவர்ணம், கீர்த்தனை, சௌக்க காலக் கிருதி, பதம், துதிப்பாடல்கள்,  தில்லானா, காவடிச்சிந்து, திருப்புகழ் போன்ற இசைப்பாடல் வகைகள் இந்நிகழ்வில்  இடம்பெற உள்ளதாகவும் அறிகிறேன். இவற...